சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில், ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 01) ஆபரண தங்கம், கிராம், 14,050 ரூபாய்க்கும், சவரன், 1,12,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஏப்ரல் 02) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் குறைந்து, 13,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 800 ரூபாய் சரிவடைந்து, 1,11,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 255 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலை, மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 200 ரூபாய் குறைந்து, 13,750 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,600 ரூபாய் சரிவடைந்து, 1,10,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு, 2,400 ரூபாய், வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்தது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
