2 தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் முதல்வர் பங்கேற்பாரா? அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன வார்த்தை – minister sengottaiyan clarifies whether the cm vijay will participate in by-election campaign

ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டுத் தொழிலதிபர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காகவே முதல்வர் விஜய் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.இதனைத் தொடர்ந்து, 2 தொகுதி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 16-ஆம் தேதி தொடங்கவுள்ளது.நிச்சயம் தவெக வெற்றி பெறும் என்று கூறினார். மேலும் இந்த இடைத்தேர்தலில் முதல்வர் பிரச்சாரம் மேற்க்கொள்வாரா என்ற கேள்விக்கு பொறுத்திருங்கள் என்று கூறினார்.

இதனையடுத்து முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியதற்கு திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது முதல்வர் விஜய் குறித்தும் அமைச்சர்கள் குறித்து ஒருமையில் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தது குறித்த கேள்விக்கு, ஆட்சியில் இருப்பவர்கள் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தி தவெக அரசுக்கு உள்ளது.

ஆனால், அந்த விமர்சனங்கள் நேர்மையானதாக இருக்க வேண்டும். வேண்டும் என்றே செய்யப்படும் விமர்சனங்கள் வேறு, மக்கள் நலனுக்கான குறைகளைச் சுட்டிக்காட்டுவது வேறு என்றுகூறினார்.

Source link