தல, தளபதி: இந்த வீக் எண்டில் சமூக வலைதளங்களில் இரண்டே இரண்டு விஷயங்கள் தான் டிரெண்டிங். ஒன்று லண்டனில் அஜித் குமார், முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு. இன்னொன்று தலைவர்னா யார் தெரியுமா என்று பிக் பாஸ் 10 வீட்டில் விஜய் சேதுபதி பேசியது.
என்னது அஜித்தும், விஜய்யும் சேர்ந்துவிட்டார்களா என்று வியந்து பேசுபவர்கள் பேசுகிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது, அவர்கள் என்றுமே நண்பர்கள் தான் என சிலர் தெரிவித்துள்ளனர். லண்டனில் நடந்த அந்த சந்திப்பை பார்த்து அஜித் ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அந்த சந்தோஷத்தை விட விஜய் சேதுபதியை விளாசுவதில் பிசியாகிவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். பிக் பாஸ் 10 வீட்டில் இருக்கும் போட்டியாளரான சாதிகாவை தலைவராக தேர்வு செய்தது தெரிந்த விஷயம் தான். ஆனால் அவரால் பிக் பாஸ் வீட்டை வழிநடத்த முடியவில்லை. அதை அவர் ஒப்புக் கொண்டார்.
மக்கள் செல்வன் கருத்து: சாதிகா பற்றி விஜய் சேதுபதி தெரிவித்த கருத்து அவருக்கானது இல்லை தமிழகத்தின் நடப்பு அரசியல் பற்றியது என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். தலைவர், தலைமை பண்பு பற்றி எதுவுமே தெரியாமல், பிரச்சனை எதுவும் வந்துவிட்டால் எதிரணி மீது பழியை போட்டுவிடுவது, ஓடிவிடுவது எல்லாம் மோசம் என்றார் விஜய் சேதுபதி. அவர் சாதிகாவை விளாச ஆனால் அது பிக் பாஸுக்கானது இல்லை என்று அவரை திட்டுகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
மாஸ்டர் படத்தில் நடித்தபோது அண்ணன் மீது பயங்கரமாக பாசமாக இருந்தது போன்று நடித்தீர்களா விஜய் சேதுபதி என்று கேட்கிறார்கள் தளபதியன்ஸ். பிக் பாஸ் 10 சீசனை சுவாரஸ்யமாக்கவே விஜய் சேதுபதி இப்படி ஆளும் அணி, எதிரணி, சட்டசபையில் இருந்து ஆளும் ஆணி வெளிநடப்பு செய்யக் கூடாது, எதிரணி தான் போகணும் என்று பேசியிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.
திவ்யா பாராட்டு: சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதி குறித்த விமர்சனங்களாக இருக்கும் இந்த நேரத்தில் அவரின் பிக் பாஸ் வீட்டு பேச்சு வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. அதற்கு அவர் கொடுத்த கேப்ஷன் தான் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
லீடர்ஷிப் என்றால் என்னவென்று யாருக்கு பாடம் எடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி என்பதே அந்த கேப்ஷன். விஜய் சேதுபதியை திவ்யா சத்யராஜ் பாராட்டிய ட்வீட்டில் கமெண்ட்ஸுகள் வந்து குவிந்துவிட்டது. எது எப்படியோ செப்டம்பர் 6ம் தேதி துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி 12ம் தேதியில் இருந்து அனைவரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மிஷன் சக்சஸ் விஜய் சேதுபதி என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சவின்யா, முனி: இதற்கிடையே பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் சவின்யா. முனியம்மா அக்கா டேஞ்சர் ஜோனில் இருந்தபோதிலும் அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். முனியம்மாவை எல்லாம் ஃபினாலே வாரம் வரை தங்க வைத்து கன்டன்ட் கொடுக்க வைப்பார்கள் பாருங்களேன் என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள். இதற்கிடையே பிளாக் பாண்டிக்கு பதிலாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் மணிவண்ணனின் சகோதரி காலமானார். மணிவண்ணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அக்கா வீட்டிற்கு வருவதற்குள் காரியம் எல்லாம் முடிந்துவிடும் என்பதால் அவரை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டார்கள் குடும்பத்தார்.
Source link
