வெஸ்ட் இண்டீஸ் தொடர்: கே.எல். ராகுல் துணை கேப்டன் ?

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியும் இதே காலகட்டத்தில் நடைபெறுவதால் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாத நிலையில், , ஒருநாள் அணியில் அவரது இடம் மட்டும் அல்லாமல் துணைக் கேப்டன் பொறுப்பும் வேறு ஒருவருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கே.எல். ராகுல் முன்னணி தேர்வாக பார்க்கப்படுகிறார். அவருக்கு சர்வதேச அனுபவம் அதிகம். ஏற்கனவே இந்திய அணியை சில போட்டிகளில் வழிநடத்திய அனுபவமும் அவருக்கு உள்ளது.

Source link