5 முனைபோட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்

சென்னை,

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இடைத்தேர்தல்

அதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

வேட்புமனு தாக்கல்

இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். இதன்படி மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

விஜய் பிரசாரம்

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். முதல்-அமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த மாதம் 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் அக்டோபர் 2, 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நா.த.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன.

5 முனை போட்டி

இதற்கிடையில், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) போட்டியிடும் என்றும், தாராபுரம் இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போட்டியிடும் என்றும், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை மறுதினம் (15-ந்தேதி) அறிவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. என 4 முனை போட்டி இருந்த நிலையில், இடதுசாரிகளின் இந்த அறிவிப்பால் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link