சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் 2 முக்கிய புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன. ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் நேரம் மற்றும் முழு விவரங்களை இதில் பார்க்கலாம்.
சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணியால் ரயில் சேவை ரத்து
ரயில் பாதையில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான குறிப்பிட்ட புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை மதியம் 2.25 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்படும் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்தும் ரயில் ரத்து
அதேபோல், நாளை மதியம் 3.45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்படும் புறநகர் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதால், வழக்கமாக இந்த நேரத்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கோவை மெட்ரோ நிராகரிப்பு: பாஜக சொல்லும் காரணம் என்ன? செந்தில் பாலாஜி கேள்வி
பயணிகள் மாற்று ஏற்பாடு செய்ய அறிவுறுத்தல்
தாம்பரம் – சென்னை கடற்கரை வழித்தடத்தில் தினசரி ஏராளமான பயணிகள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்காக பயணம் செய்யும் பொதுமக்களுக்கு இந்த ரயில் சேவை முக்கியமானதாக உள்ளது. எனவே, நாளை குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்ய உள்ளவர்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு, தேவையான மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் வழக்கமான ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source link
