திருப்பூர்: நான் திமுக அடிமை, திமுக பரம்பரை என பெருமை பேசுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: நீ அறுபது வருடமாக சூடு படுகிறாய், அதே தான் போடுகிறாய். அதே சூரியன், சூரியன், இரட்டை இலை. இதுல பெருமை வேற எங்களிடம், நாங்கள் சாகும் வரை சூரியன் தான். ஒருவன் என்னிடம் நான் எல்லாம் திமுக அடிமை என சொன்னதற்கு சிரித்தேன். ஒருத்தன் அடிமையாக இருப்பதை இப்பத்தான் கேட்கிறேன்.
திமுக பரம்பரை
இன்னொருவன் வந்து திமுக பரம்பரை என்று சொன்னான். என்ன பரம்பரை உன் பரம்பரை, ராஜ, ராஜ சோழ பரம்பரை, கள்ள ரயில் ஏறி வந்த பரம்பரை தானே நீங்கள்? அதற்கே பெருமையாக இருந்தால், உலகத்தையே வென்று 3வது பெரிய வல்லரசை நிறுவிய பரம்பரை நான் எப்படி இருக்க வேண்டும்?
புத்தகம் படி
உன்னை ஏமாற்றுவதை நல்லாட்சி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான். நீ நம்பிக்கிட்டு இருக்கிறாய். ஏதையாவது படி, வாசிப்பதை சுவாசிப்பது போல் வைத்து கொள். புத்தகம் படி, அறிவை விரிவாக்கு, எதையாவது பண்ணி கொண்டு திரியாதே! செல்போன் பார்க்கும் நேரத்தில் பத்து புத்தகத்தை எடுத்து படி. இவ்வாறு சீமான் பேசினார்.
கதை சொன்ன சீமான்!
”காட்டில் இருந்து ஓநாய் வந்து வீடுகளில் உள்ள கோழிகளை சாப்பிட்டு விட்டு சென்றுவிடுகிறது. ஊரே சேர்ந்து முடிவு எடுத்து ஒரு கத்தியை ஊன்றுவிடுகிறார்கள். அந்த கத்தியில் கோழி ரத்தத்தை கொஞ்சம் தடவி விட்டு விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஓட்டு கேட்க வரும் மாதிரி ஓநாய் வருகிறது, கோழி ரத்தத்துக்கு கத்தியை சாப்பிடுகிறது. கத்தியில் இருந்த கோழி ரத்தத்தை சுவைப்பதாக நினைத்து தனது ரத்தத்தை ஓநாய் குடிக்கிறது.
இந்த ஓநாய்க்கு தான் ரத்தத்தை சாப்பிடுவது தெரியாமல், மொத்த ரத்தமும் வெளியேறிய பிறகு செத்து போகிறது. உனக்கு தெரியவில்லை, உன் ரத்தத்தை உறிஞ்சி, 2 ஆயிரம் ரூபாய், மிக்சி, கிரைண்டர் கொடுக்கிறான் என்று தெரியவில்லை. கடைசியாக ஓநாய் செத்த மாதிரி நீ செத்து போவாய், அவன் சிரித்து கொண்டு இருப்பான். 15 வருடமாக நான் கத்துகிறேன், ஒன்னும் புரியவில்லை என குமுறலை சீமான் வெளிப்படுத்தினார்.
பாட்டு பாடிய சீமான்
மாத்தி, மாத்தி வாக்கு செலுத்தி, வாழ்க்கை நிலை மாறவில்லையே? என்ன சொல்லி, ஏது சொல்லி, மண்டையில் ஏறவில்லையே, கற்று அறிவு எங்கே தான் போய்விட்டது? என்னுடைய மக்களுக்கு என்ன தான் ஆச்சு? அய்யோ என்னுடைய மக்களுக்கு என்ன தான் ஆச்சு?
மாத்தி, மாத்தி வாக்கு செலுத்தி, வாழ்க்கை நிலை மாறவில்லையே? நாடு ஆண்ட வம்சம் இது? நாதியற்று நிற்கிறதய்யா, ஆண்ட பரம்பரை பரிதவித்து கிடக்குதுய்யா, கேடு கெட்ட கூட்டத்திடம் நாடு சிக்கி தவிக்குதுய்யா, எப்போம் வரும் நல்லாட்சி, ஏன் ஜனமோ ஏங்குதுய்யா?
மாத்தணும் என்று எண்ணம் இருக்கிறது. அதுக்கு விவசாயி சின்னம் இருக்கிறது. ஓட்டை அதுல போட்டால் இந்த அநியாயம் முடியும். நல்ல அதிகாலை விடியும் என பாட்டு பாடிய சீமான் ஓட்டை கொஞ்சம் மாத்தி போடுங்கள். ஒரே ஒரு முறை விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போட்டு பாருங்கள், அப்புறம் பாருங்கள் நாட்டை என்றார்.
