தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய தந்தை கைது- Father Arrested for Daughter Murder Case

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மச்சார்லாவை சேர்ந்தவர் சந்திரசேனா. தொழிலதிபர். இவரது மகள் சவுதேஸ்வரி (வயது 22) ஜம்மல மடகாவை சேர்ந்தவர் நாகராஜு. இவர் சவுதேஸ்வரியின் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

அப்போது சவுதேஸ்வரிக்கும், நாகராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் நீண்ட நேரம் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். மகளின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு தெரியவந்தது. அவர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இருப்பினும் சவுதேஸ்வரி, நாகராஜு உடனான காதலை கைவிடவில்லை.

இந்த நிலையில் சவுதேஸ்வரிக்கு அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அவசர, அவசரமாக திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

Source link