திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் சொத்துக்களை பறிமுதல் செய்த உத்தரவை ரத்து செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தற்போது உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஜெகத்ரட்சகனின் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். ”சொத்துக்கள் பறிமுதல் நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கது அல்ல, அடிப்படை ஆதாரமற்றது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
