அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முரளிதரன் நேற்று முன்தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்து கட்சி இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. என்னைத் தான் அறிவிப்பார்கள் அதனால் இன்று நல்ல நாள் என்பதால் வேட்பு மனுத் தாக்கல் செய்ததாக கூறினார்.
அதோடு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டிருந்தார். துண்டுப்பிரசுரங்களும் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக முரளிதரனைக் கட்சி பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கியுள்ளார். பாஜக என்னை நீக்கினாலும் சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என்கிறார் முரளிதரன்.
