சென்னை: தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். அவர், ''தேஜ கூட்டணி 210

சென்னை: தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். அவர், ”தேஜ கூட்டணி 210 தொகுதிகளை வெல்ல பிரசாரம் மேற்கொள்வேன்” என பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. சாத்தூரில் நயினார், கோவை வடக்கில் வானதி, அவிநாசியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர். பெண்கள் 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. போட்டியிடும் பாஜ வேட்பாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.


இது குறித்து சமூக வலைதளத்தில் அண்ணாமலை வெ ளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள, பாஜவை சேர்ந்த வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல், செயலற்றத்தன்மை மற்றும் திமுகவின் துரோகம் ஆகியவற்றால் சலிப்படைந்துள்ள தமிழகத்தின் ஒவ்வொரு சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவையும் இவர்கள் பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடியின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பிரம்மாண்டத்துடனும், ஒரு தெளிவான நோக்கத்துடனும் முன்னேறி வருகிறது. தேசம் இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவம் நிறைந்த மற்றும் சுயநலம் மட்டுமே கொண்ட திமுக அரசால் தமிழகம் பின்தள்ளப்பட்டுள்ளது.

ஒரு கட்சித் தொண்டனாக, வரும் சட்டசபை தேர்தல்களில் தே ஜ கூட்டணி 210 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், நமது பாஜ மற்றும் தேஜ கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Source link