பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் பூனம் பாண்டே. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக மைதனாத்தை சுற்றி வருவேன் எனக் கூறி சர்ச்சைக்கு ஆளானார். பின்பு அதற்கு எழுந்த கடும் விமர்சனத்தால் தன் முடிவை பின்வாங்கினார். பின்பு இதே போன்று 2012ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றால் நிர்வாண போஸ் கொடுப்பதாக கூறி மீண்டும் விமர்சனத்துக்கு ஆளானார்.
பின்பு 2020ஆம் ஆண்டு கோவாவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆபாச வீடியோவை படமாக்கியதற்காக கைது செய்யப்பட்டு பின்பு வெளியே வந்தார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஆபாச பட மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டார். பின்பு முன் ஜாமீன் பெற்றார். ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் விதமாக கடந்த 2024ஆம் ஆண்டு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக நாடகமாடினார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர் தனது நீண்ட நாள் காதலரான சாம் அஹ்மெத் பாம்பே என்பவரை 2020 திருமணம் செய்தார். பின்பு அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி அடுத்த ஆண்டே பிரிந்தார். இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது கடந்த மார்ச் 31ஆம் தேதி தான் கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இது ஏப்ரல் 1, முட்டாள் தினத்தை முன்னிட்டு பதிவிட்டிருக்கலாம் என ரசிகர்கள் யூகித்தனர். அது தற்போது உறுதியாகியுள்ளது. பூனம் பாண்டே அதன் பிறகு ஒரு வீடியோ வெளியிட்டு அது ஃபிராங்க் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நண்பர்களே, ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அனைவரும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் உங்களை கொஞ்சம் மகிழ்விக்கலாம் என நினைத்தேன். உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது எனது உரிமை அல்லவா? வாழ்க்கையை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள், சற்று நிம்மதியாக இருங்கள்” என்றுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட விஷயத்தை இப்படி பயன்படுத்துவதா என சிலர் கடுமையாக பூனம் பாண்டேவை சாடி வருகின்றனர். ஒரு சிலர் இவருக்கு இதே வேலையாகப் போய்விட்டது என கடந்து சென்றுள்ளனர்.
