பிரபல தாதா கோஷ்டியை சேர்ந்தவருக்கு 'காப்பு'

புதுடில்லி:வாகன சோதனையில், பிரபல தாதா கோஷ்டியை சேர்ந்தவரை போலீசார், கைது செய்து, விசாரிக்கின்றனர்.

டில்லியின் நியூஅசோக்நகர் பகுதியில் போலீசார் நேற்று, வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சல்மான் குரேஷி என்பவரை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர், சேனு என்ற தாதா கோஷ்டியை சேர்ந்தவர் என்பதும், அந்த கும்பலில் உள்ளவர்களை தங்க வைப்பது இவர் தான் என்பதும் தெரிய வந்தது.

அவ்வாறு அவர் ஷாஜத் என்பவரை, ரகசிய இடத்தில் தங்க வைக்க சென்று வந்த போது தான், போலீசில் சிக்கிக் கொண்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, வேறு எந்த குற்றங்களை அவர் செய்துள்ளார் என விசாரிக்கின்றனர்.

Source link