அஜித், விஜய் சந்திப்பு: தமிழக முதல்வரான பிறகு முதல் முறையாக அரசு பயணமாக லண்டன் சென்றிருக்கிறார் ஜோசப் விஜய். லண்டன் சென்ற கையோடு நண்பர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை பார்த்து ரசித்தார். நண்பருக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர். மேலும் தான் அழைத்ததுமே கார் பந்தயம் நடந்த இடத்திற்கு வந்த நண்பர் விஜய்க்கு தமிழக வெற்றிக் கழகம் கொடி நிறத்தில் ஒரு ரேஸ் உடையை பரிசாக கொடுத்தார் அஜித் குமார்.
மேலும் விஜய்யை தான் ரேஸ் காரில் அமர வைத்து ஓட்டினார். அஜித், விஜய் அந்த காரில் இருந்தபோது என்ன பேசியிருப்பார்கள் என்று கற்பனையாக சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன. நண்பேன்டா, தலடா, தளபதிடா என விஜய் ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரேமலதா வைரல் பதில்: வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கச் சென்ற முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். முதல்வருக்கு வாழ்த்துக்கள் என்றார். இல்லை மேடம், லண்டன் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கவே, கண்ணால தான் பார்க்கிறேன், வேறு என்னத்த பார்க்க. அதை பற்றி சொல்ல எதுவும் இல்லை. அவரின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
ஆள் தெரியாமல் கேட்டுவிட்டார்கள். கேப்டன் மனைவி வேற மாதிரி பதில் அளித்திருக்கிறார். அண்ணாவின் லண்டன் பயணம் பற்றி சிறப்பாக பதில் அளித்துவிட்டார் பிரேமலதா. நல்லது செய்ய வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் அரசியலுக்கு வந்த விஜயகாந்துக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்திருந்திருக்கலாம் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
கேப்டன் விஜயகாந்த் இல்லாவிட்டாலும் அவர் குடும்பத்தார் மீது பாசம் வைத்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். சட்டசபையிலும் சரி, வெளியேயும் சரி பிரேமலதா பேசுவதை கவனித்து வருவதுடன் அவ்வப்போது பாராட்டி ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். இந்நிலையில் தான் தற்போது பாராட்டியிருக்கிறார்கள்.
ஜோதிடர் குறித்த கேள்வி: முன்னதாக சட்டசபையில் முதல்வர் விஜய் முன்பு பிரேமலதா பேசியதை சினிமா ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதாவது உங்கள் ராஜகுருவான ராதன் பண்டிட்டுக்கு அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். அப்படி அவர் உங்களுக்கு ராஜகுருவாக இருந்தால் பர்சனலா வச்சுக்கணும். ஆனால் அவரை அரசு உயர் பதவியில் கொண்டு வருவதன் மூலம் வாக்களித்த இளைஞர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டார்.
இதையடுத்து விஜய்யின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட்டின் அரசு வேலை நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதை பார்த்துவிட்டு, அண்ணிடா, கேப்டன் பொண்டாட்டிடா, யாரு கிட்ட என பிரேமலதாவை சினிமா ரசிகர்கள் அப்பொழுது பெரிய அளவில் பாராட்டினார்கள்.
அம்பிகாவுக்கு பாராட்டு: லண்டனில் விஜய்ணா மட்டும் அல்ல த்ரிஷாவும் அவருடன் சேர்ந்து கார் ரேஸ் பார்த்தது தளபதியன்ஸ்களை அதிருப்தி அடைய செய்திருக்கிறது. இந்நிலையில் தான் உடன் செல்வதால் நண்பருக்கு பெயர் கெடும் எனில் செல்வதை தவிர்ப்பேன் என விஜய், த்ரிஷா நட்பு குறித்து அம்பிகா பேசிய வீடியோவை தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இது ஒரு பக்கம் இருக்க, அஜித் குமார் ரசிகர்களோ, உங்களை உருவக் கேலி செய்த அந்த விஜய் உடன் நட்பு பாராட்டலாம் ஐயா என அவரை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
