புதுச்சேரியில் பிரதமர் மோடி சாலை வலம்; உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்!

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 30 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. ஆட்சியைத் தக்க வைத்து கொள்ள என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க – அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் – திமுக அடங்கிய கூட்டணியும் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே புதிதாக களமிறங்கிருக்கும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மட்டுமின்றி புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் தவெக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால், அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு பிரதமர் நரேந்திர மோடி அண்மை காலமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு அடிக்கடிக்கு வந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

குறிப்பாக புதுச்சேரியில் தேர்தல் நடைபெற இன்னும் 1 வாரமே இருக்கும் சூழலில், அங்கு  தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (03-04-26) புதுச்சேரிக்கு வருகை தந்தார். டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னையில் இருந்து ஹெலிகாப்ட மூலம் புதுச்சேரிக்கு சென்றார். அங்கு அவரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.க தலைவர் ராமலிங்க, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் அஜந்தா சிக்னல் சந்திப்பில் இருந்து ராஜா திரையரங்கம் வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். இந்த ரோடு ஷோவில் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பிரதமர் மோடி அருகில் இருந்தனர். இந்த நிகழ்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்களும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Source link