விவாகரத்தாகிடுச்சா?: மலையாள படங்களில் நடித்து வருபவர் ஸ்ரீநாத் பாசி. 2024ம் ஆண்டு சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்திய மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீநாத். அவர் நடித்திருக்கும் அவரச்சன் அன்ட் சன்ஸ் படத்தை விளம்பரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரேகா மேனனுக்கு பேட்டி அளித்தபோது தனக்கும், தந்தைக்கும் இடையேயான உறவு குறித்து பேசினார். அப்பொழுது தனக்கு விவாகரத்தாகிவிட்டதாக ஸ்ரீநாத் சொன்னதும் ரேகா மேனன் அப்படியே ஷாக் ஆகிவிட்டார்.
ஸ்ரீநாத் அப்பா: ஸ்ரீநாத்துக்கும், மனைவி ரீத்துவுக்கும் விவாகரத்தானது இதுவரை யாருக்கும் தெரியாத நிலையில் அவர் பேட்டியில் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டது தான் பலரின் அதிர்ச்சிக்கும் காரணமே. ஸ்ரீநாத் கூறியதாவது, நான் என் பெற்றோருடன் அவர்கள் வீட்டில் வசித்து வருகிறேன். விவாகரத்தான பிறகு அப்பா, அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன். 2024ம் ஆண்டு நானும், மனைவியும் பிரிந்தோம். ஆனால் இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். தற்போது நான் இங்கு சொல்வதால் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. சில சமயம் அப்பாவுடன் வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு கோபத்தில் மாடிக்கு சென்று, இனியும் இவர்களுடன் இதே வீட்டில் வாழ முடியாது என நினைப்பேன். இது சரிபட்டு வராது என்று நினைப்பேன். ஆனால் பெற்றோர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதை உணர்ந்தேன் என்றார்.
ஸ்ரீநாத் காதல் கதை: எல்லாம் நல்லபடியாக தானே சென்றது. ரீத்து சேச்சியை ஏன் பிரிந்துவிட்டீர்கள் என ஸ்ரீநாத்திடம் சேட்டன்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீநாத் பாசி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது தான் ரீத்து ஜகரியாவை சந்தித்தார். முதலில் நட்பாக பழகினார்கள். அதன் பிறகு ரீத்து, ஸ்ரீநாத் இடையே காதல் ஏற்பட்டது. சுமார் 10 ஆண்டுகளாக பழகிய பிறகே 2016ம் ஆண்டு ஸ்ரீநாத், ரீத்துவின் திருமணம் பெற்றோர் ஆசியுடன் நடந்தது. அவர்களின் திருமண வாழ்க்கை 8 ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்துவிட்டது.
ஜி.வி. பிரகாஷ் விவாகரத்து: ஸ்ரீநாத் பாசி, ரீத்து பிரிந்ததை பார்த்து உங்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம் எங்களுக்கு இல்லை என்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். வேலைக்கு சென்ற இடத்தில் வந்த காதல், திருமணம் வரை சென்று விவாகரத்தில் முடிந்திருக்கிறது. ஆனால் பள்ளியில் படித்தபோது காதல்னா என்னனு தெரிய வந்த வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜி.வி. பிரகாஷ் குமார், பாடகி சைந்தவியே விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அதனால் எத்தனை ஆண்டுகளாக காதலித்தாலும் விவாகரத்து நடப்பதை தவிர்க்க முடியாது போன்று என கோலிவுட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சைந்தவி, மகள்: விவாகரத்தான ஜோடிகளில் ரசிகர்கள் அதிக மதிப்பு வைத்திருக்கும் ஜோடி ஜி.வி. பிரகாஷ் குமார், சைந்தவி ஜோடி. நானும், மனைவியும் பிரிகிறோம். இனி நண்பர்களாக இருப்போம். பிள்ளைகளுக்காக ஒன்றாக இருப்போம் என்று பிரபலங்கள் அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் அந்த அறிக்கையின்படி வாழ்வது ஜி.வி., சைந்தவி தான் என்கிறார்கள் ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
விவாகரத்தாகிவிட்டாலும் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி இடையே வெறுப்பு எதுவும் கிடையாது. மகள் எப்பொழுது விரும்பினாலும் அப்பா வீட்டிற்கு செல்லலாம் என்று இருக்கிறார் சைந்தவி. தன் வீட்டிற்கு வந்த இடத்தில் மகள் சேட்டை செய்தால் அதை சைந்தவிக்கு போன் போட்டு சொல்கிறார் ஜி.வி. சைந்தவியும் மகள் குறித்து ஜி.வி.க்கு போனில் அப்டேட் கொடுக்கிறார்.
Source link
