தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க – அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் – திமுக அடங்கிய கூட்டணியும் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் திருவிக நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடும் நிலையில் திருவிக தொகுதியில் புதிய தேர்தல் பணிமனையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ”அதிமுக கூட்டணி வேட்பாளரான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த நிலையில், இன்று தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில் பணிமனை திறக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மக்கள் பணியைத் தொடரவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கவும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. திருவிக நகரில் கடந்த முறையைவிட அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் நம்பிக்கை உள்ளது” என்றார்.
இந்த பணிமனை திறப்பு விழாவில் திரளான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
