டெஹ்ரான்: ஈரானில், ‘பி 1’ என்ற மிகப்பெரிய பாலத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, வளைகுடா நாடுகளின் எட்டு பாலங்களை ஈரான் குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு படையினருக்குமான போர், 35 நாட்களாக நடந்து வருகிறது. பரஸ்பர தாக்குதல்கள் மேற்காசியா முழுதும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
சமீபத்தில், ஈரானின் வடக்கே அமைந்துள்ள அல்போர்ஸ் மாகாணத்தின் கரஜ் பகுதியில் உள்ள, பி 1 பாலத்தின் மீது அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் குண்டு வீசி தாக்கின. இதில் பாலம் முழுமையாக தகர்க்கப்பட்டதுடன், எட்டு பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க, வளைகுடா நாடுகளில் உள்ள எட்டு முக்கிய பாலங்களை தகர்க்க ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
