#BREAKING : வட இந்தியாவில் நிலநடுக்கம்..! மக்கள் அலறியடித்து ஓட்டம்..!

வட இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் சில குதியில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. புது டெல்லி, ஜம்மு காஷ்மீரில் மட்டுமின்றி பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் போன்ற வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோளில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. சுமார் 10-15 விநாடிகள் ஜம்மு காஷ்மீரில் மக்கள் இந்த நிலஅதிர்வை உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அச்சத்தில் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, சாலையில் தஞ்சம் புகுந்தனர்.

Source link