Iran War | சுட்டுவீழ்த்தப்பட்ட போர் விமானம்… ஒரு விமானியை மீட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகியவற்றின்படி, அந்த விமானம் ஒரு F-15E ரக போர் விமானமாகும். இதில் ஒரு விமானியும், பின் இருக்கையில் ஒரு ஆயுத அமைப்பு அதிகாரியும் இருப்பார்கள்.

அதிபர் டொனல்டு டிரம்புக்கு நிலைமை குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வெள்ளை மாளிகையிடம் இருந்தோ அல்லது பென்டகனிடம் இருந்தோ உடனடியாக அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.

டிரம்ப் போருக்கு உத்தரவிட்ட பிறகு ஈரானுக்குள் நிகழ்ந்த முதல் விமான இழப்பை தொடர்ந்து, அமெரிக்காவின் சிறப்பு படைகளால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Source link