செயின்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி, தொடரை 3-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி செயின்ட் கிட்சில் நடந்தது.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹேலி (34), டீன்டிரா டாட்டின் (22) ஆறுதல் தந்தனர். ஸ்டெபானி டெய்லர் (5), ஜன்னிலியா கிளாஸ்கோ (0) உள்ளிட்டோர் ஏமாற்றினர். சினெல்லி ஹென்றி (42*) ஓரளவு கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 35.4 ஓவரில் 136 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் அலானா கிங் 5 விக்கெட் சாய்த்தார்.
சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜியா (23) நம்பிக்கை தந்தார். லிட்ச்பீல்டு அரைசதம் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 137/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. லிட்ச்பீல்டு (68), எல்லிஸ் பெர்ரி (33) அவுட்டாகாமல் இருந்தனர்.
