சீமான் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: அவதூறு வழக்கு ரத்து செய்​யப்​பட்​டதற்கு எதி​ராக ஐபிஎஸ் அதிகாரி வருண்​கு​மார் தொடர்ந்த மேல்​முறை​யீட்டு மனுவுக்கு பதில் அளிக்​கு​மாறு சீமானுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திருச்சி சரக டிஐஜி​யாக இருந்​தவர் வருண்​கு​மார். இவர் தன் மீதும், தனது குடும்​பத்​தினர் மீதும் நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தூண்​டு​தலின்​பேரில் அக்​கட்​சி​யினர் சமூக வலை​தளங்​களில் அவதூறு கருத்து பதி​விடு​வ​தாக​வும், இது தொடர்​பாக சீமான் உள்​ளிட்​டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று கோரி​யும் திருச்சி 4-வது குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் அவதூறு வழக்கு தாக்​கல் செய்​தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு கடந்த நவம்​பரில் ரத்து செய்​தது.

Source link