ராம்லீலா மைதானத்தில் ஊர்வலங்கள் டில்லியில் இன்று போக்குவரத்து மாற்றம்

புதுடில்லிமத்திய டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடக்கவிருக்கும் ஊர்வலங்களால், அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் மற்றும் வேறு பாதையில் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மத்திய டில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில், இன்று காலை, 8:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை போக்குவரத்து அதிகம் இருக்கும் என்பதால், இந்த பகுதியில் காலை, 10:00 மணி முதல், போக்குவரத்து மாற்றம் மற்றும் போக்குவரத்து திருப்பம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால், ஜவஹர்லால் நேரு மார்க், அசப் அலி ரோடு, சாமன் லால் மார்க், ஆஜ்மீரி கேட் மற்றும் மின்டோ ரோடு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், டில்லி கேட், மின்டோ ரோடு, ஆஜ்மீரி ரோடு, அசப் அலி ரோடு, கமலா ரோடு சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

வாகனங்களை நிறுத்த, மாதா சுந்தரி கல்லுாரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ராம்லீலா மைதானம் செல்ல பஸ்கள் வசதியும் உள்ளது.

பிற இடங்களில் நிறுத்தும் வாகனங்கள், போலீசாரால் இழுத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link