சென்னை: 'தமிழகத்தில், தென் மாவட்டங்களில், சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை

சென்னை: ‘தமிழகத்தில், தென் மாவட்டங்களில், சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை:

தமிழகத்தின் தென் மாவட்டங்களில், புதுச்சேரியில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக வட மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில், இன்று முதல் ஏப்., 7 வரை, வெயிலின் தாக்க ம் படிப்படியாக அதிகரிக்கும்.

இதனால், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை, அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 37 டிகிரி செல்ஷியஸ் வரை, அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link