12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2% உயர்வு

அ மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 156 காசுகள் (1.6%) உயர்ந்துள்ளது.

நேற்று காலை அன்னிய செலாவணி வர்த்தக துவக்கத்தில் ரூபாய் மதிப்பு 94.62 ஆக துவங்கியது. வர்த்தகத்தின் இடையில் 188 காசுகள் வரை உயர்ந்து 92.82 ஆக வலுப்பெற்றது.

நேற்றைய வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 93.14 ஆக நிலைபெற்றது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் போன்றவை ரூபாய்க்கு அழுத்தத்தை தந்தாலும், ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கைகள் ரூபாய் மதிப்பை வலுப்படுத்தியுள்ளன.

முன்னதாக, அன்னிய செலாவணி சந்தையில் வங்கிகள் ஈடுபடுவதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, வங்கிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் வசம் வைத்திருக்கக்கூடிய அன்னிய செலாவணி இருப்பிற்கான உச்சவரம்பை 100 மில்லியன் டாலராக குறைத்துள்ளது.

இந்த உத்தரவை ஏப்., 10க்குள் செயல்படுத்த அறிவுறுத்தியதே, சந்தையில் டாலர் விற்பனை அதிகரித்து ரூபாய் மதிப்பு கணிசமாக உயர முக்கிய காரணமாக அமைந்தது.

Source link