கொடுத்த ஒரு தொகுதியை திருப்பி தந்த சண்முகம்

– நமது நிருபர் –

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகளை கேட்டிருந்தார். ‘ஒரு தொகுதியில் தாமரை சின்னத்திலும், மதுரை மத்தி தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் என் கட்சி போட்டியிடும்’ என தெரிவித்தார்.

அதன்படி, மதுரை மத்தி தொகுதியில் குஷ்பு கணவர் சுந்தர் போட்டியிடுகிறார். ஆனால், பா.ஜ., தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறனுக்கு மட்டும் திருப்பத்துாரில் சீட் வழங்கிவிட்டு, மற்ற தொகுதிகளுக்கு தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. புதிய நீதி கட்சிக்கு, உறுதி அளித்தவாறு தொகுதி தரவில்லை. எனினும், ஏ.சி.சண்முகம் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

”கடினமான தொகுதியை கொடுத்தனர். அதனால், திருப்பி கொடுத்து விட்டோம். அங்கு பா.ஜ. நல்ல வேட்பாளரை நிறுத்தி உள்ளது. அவர் பெயரை நான் தான் பரிந்துரைத்தேன்,” என்றார்.

Source link