“பெயரை பார்த்து ஏமாந்துட்டாரே!” – ‘சில்லி டஸ்டட் கோல்டு பிங்கர்ஸ்’ என ஆர்டர் செய்தவருக்கு வந்தது என்ன தெரியுமா ?

ஃபிரையம்ஸ் (Fryums) என்பவை பொதுவாக அன்றாட தின்பண்டங்களுடன் தொடர்புடையவை. வழக்கமாகவே இந்த வகையான தின்பண்டங்கள் மிகவும் குறைந்த விலை கொண்டவை.

உணவகப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த விளக்கப் பெயருக்கும், உண்மையில் பரிமாறப்பட்ட உணவுக்கும் இடையிலான முரண்பாடு இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதேசமயம், உணவக ஊழியர்களிடம் இது தொடர்பான சந்தேகத்தை எழுப்பினாரா என்பது குறித்து அந்தப் பயனர் எதையும் குறிப்பிடவில்லை.

எந்தவித ஆடம்பரமான அலங்காரமும் இல்லாமல் அந்த தின்பண்டத்தை காட்டும் இந்தப் புகைப்படம் மற்றும் அவரின் பதிவு இணையத்தில் வேகமாக வைரலான நிலையில் இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் நகைச்சுவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

ஒரு பயனர், ‘இங்கே எங்களுக்கு இது வெறும் 10 ரூபாய்க்கே கிடைக்கிறது’ என்று எழுதியிருந்தார்.

மற்றொரு பயனர், ‘சில போட்டி அப்பளத்திற்காக ஒருவர் 150 ரூபாய் கொடுப்பதை நேரில் பார்க்கும் முதல் நபர் என் பரம்பரையிலேயே நான்தான்’ என்று கூறியுள்ளார்.

Source link