பெரம்பூரில் திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும் விஜய்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடந்த மார்ச் 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதியுடன் முடிவடைகிறது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வேட்பாளர்களை அறிவித்த தேசிய கட்சிகள்

தமிழக சட்டசபை தேர்தலில், போட்டியிடும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியிலும், பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணியிலும் இணைந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் அனைவரும் வேட்பாளர்களை அறிவித்தாலும் இந்த இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய 2 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் பா.ஜ.க. கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பின் உச்சத்தை எட்டியுள்ளது.

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லாதது ஏன்? தமிழிசை சௌந்திரராஜன்

பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இதில் முன்னாள் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து பேசிய தமிழிசை சௌந்திரராஜன், அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் களப்பணியில் இருக்கட்டும் என்பதை தான் பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியலில் கூறியுள்ளது. யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதோ, புறக்கணிக்கப்படுவதோ இல்லை என்று கூறியுள்ளார்.

4-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சசிகலா

சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியான அ.இ.பு.த.ம.மு கழகத்தின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம் செய்து சசிகலா அறிவித்துள்ளார். விளாத்திக்குளம் தொகுதியில் பொன்பாண்டி, உளுந்தூர்பேட்டை தொகுதியில் ரா.உதயகுமார் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

  • Apr 04, 2026 07:43 IST

    புதுச்சேரி சட்டசபை தேர்தல் – விஜய் இன்று பிரசாரம்

    ஏப்ரல் 9-ம் தேதி புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், த.வெ.க தலைவர் விஜய், இன்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதன்படி, காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி, 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால், 12 மணி முதல் 1 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

  • Apr 04, 2026 07:41 IST

    பா.ஜ.க மைய குழுவுடன் பிரதமர் இன்று ஆலோசனை

    தமிழக சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜ.க. மைய குழு நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி சென்னையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடத்த உள்ளார்.

  • Apr 04, 2026 07:39 IST

    புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் த.வெ.க விஜய்

    தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய மார்ச் 30-ந் தேதி தனது பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த த.வெ.க தலைவர் விஜய், அதில், வயது மற்றும் வழக்கு தொடர்பான விபரங்களில் வேறுபாடுகள் இருப்பதால், திருத்தப்பட்ட புதிய பிரமாண பத்திரத்தை இன்று (ஏப்ரல் 4) தாக்கல் செய்கிறார்.  

Source link