அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் முதியவரை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிடாதாலா சுனில் (27) என்பது தெரிந்தது.
தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போன், 79 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸாரின் விசாரணையில், சிடாதாலா சுனில் ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் மறந்து விட்டுச்செல்லும் ஏடிஎம் கார்டுகளை எடுத்து வைத்துக்கொண்டு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், வயதானவர்களைக் குறிவைத்து ஏமாற்றி பணத்தைத் திருடி வந்தது தெரிந்தது. இதேபோல பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளார் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
