திருச்சூர் சிறப்பு பள்ளியில் ‘ஆட்டிசம்’ பாதித்த வாலிபர் அடித்துக்கொலை- பராமரிப்பாளர் அதிரடி கைது

முக்கியமாக ஸ்ரீநாத்தை பராமரித்து வந்த சிறப்பு பள்ளியின் பராமரிப்பாளரான திருவனந்தபுரம் வெட்டுத்துறை பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது24) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் அவரது நடத்தை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

ஆகவே அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீநாத்தை கட்டையால் சரமாரியாக அடித்துக்கொன்றதை மகேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் ஸ்ரீநாத் சிறப்பு பள்ளியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரை மகேஷ் தான் பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் ஸ்ரீநாத்தை கட்டையால் கொடூரமான முறையில் சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார். ஆனால் அவர் ஸ்ரீநாத்தை எந்த காரணத்துக்காக எதற்காக வெறி பிடித்தவாறு கட்டையால் சரமாரியாக அடித்து துடிதுடிக்க கொலை செய்தார்? என்பது மர்மமாக உள்ளது.

அது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த ‘ஆட்டிசம்’ பாதித்த வாலிபரை அந்த பள்ளியின் பராமரிப்பாளரே அடித்து கொலை செய்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link