மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பேரன், பேத்தி மூவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம் அருகே சிலாவட்டம் கிராமத்தில் பாட்டி சாந்தி (65) துணி துவைக்கச் சென்ற நிலையில், 13 வயது பேரன் தஷ்வந்த் மற்றும் 11 வயது பேத்தி கவுசிகா உடன் சென்றுள்ளனர்.
இருவரும் கிணற்றில் தவறி விழ, அவர்களை காப்பாற்ற சாந்தியும் தண்ணீரில் குதித்தார். பிறகு 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மூவரின் சடலங்களை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
