ராணுவ தலைமை தளபதி பதவி நீக்கம்; என்ன செய்யப் போகிறது அமெரிக்கா?

அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதியாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜோ பைடனால் ராண்டி ஜார்ஜ் நியமிக்கப்பட்டார் . இதையடுத்து, அந்நாட்டு சட்ட விதிகளின்படி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவர் தான் ராணுவ தலைமை தளபதியாகப் பதவி வகிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹெக்சத் கடந்த வியாழன் அன்று (02-04-26) ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜை பதவி விலக உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மூத்த ராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு குறித்து இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.  இதன் காரணமாக, ராணுவ துணை தலைமை தளபதி கிறிஸ்டோபர் சி.லானிவ் தற்காலிகமாகத் தலைமை தளபதியாகப் பதவி வகிப்பார் எனத் தகவல்கள் வெளியாகின்றன. ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக அதிபர் ட்ரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

அதே நேரத்தில், அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் மக்கள் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும், உலக நாடுகள் மத்தியில் அமெரிக்கா மீதான நன்மதிப்பும், நம்பிக்கையும் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக, ட்ரம்ப் நிர்வாகத்தில் அட்டர்னி ஜெனரல் (அரசு தலைமை வழக்கறிஞர்) பாம் போண்டி பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

Source link