நேற்று சென்னை வந்த மோடி- இன்று முக்கிய பட்டியலை இறக்கிய பாஜக

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதேபோல் புதுச்சேரியிலும் வரும் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று புதுச்சேரி வந்த பிரதமர் மோடி அங்கு ரோடு ஷோவில் ஈடுபட்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து சென்னை வந்த மோடி தனியார் ஹோட்டலில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக அதிமுக-பாஜகவின் என்டிஏவின் கூட்டணிக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ள ஆறு மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளனர். இதற்கான பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி, பியூஷ் கோயல், கிஷன் ரெட்டி போன்ற மத்திய அமைச்சர்களின் பெயர்கள் அந்த பட்டியலில் உள்ளது.

அதேபோல் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமாந்த் பிஸ்வ சர்மா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் தமிழகம் வர உள்ளனர்.

தமிழக பாஜக நிர்வாகிகளைப் பொறுத்தவரை நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன். பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், சுரேஷ் கோபி இடம்பெற்றுள்ளனர். திரைத்துறையைச் சேர்ந்த நட்சத்திர பேச்சாளர்கள் இடத்தில் சரத்குமார், குஷ்பு சுந்தர், நமீதா, கஸ்தூரி சங்கர், மதுவந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

 

 

Source link