'அமைச்சராகும் எண்ணத்தில் தி.மு.க.,வினர் ரவுடித்தனம்'

சென்னை: ”தமிழகத்தில் தி.மு.க., வினரின் ரவுடித்தனம் நடக்காத நாளே இல்லை எனும் அளவுக்கு, மாநிலம் முழுதும் மோசமான சூழல் நிலவுகிறது,” என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் உள்ள, தோக் சால் திருமண மண்டபத்தின் செயலரான நவுமான் என்பவர் மீது, கோட்டை தி.மு.க., பகுதி செயலர் இப்ராஹிம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சேர்ந்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.

தி.மு.க.,வினரின் ரவுடித்தனம் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு, தமிழகம் முழுதும் மோசமான சூழல் நிலவுகிறது.

‘ரவுடித்தனம் செய்தால், நாளை தி.மு.க.,வில் அமைச்சராக்குவர்’ என்ற எண்ணத்தில், தி.மு.க., நிர்வாகிகள் அனைவருமே, அராஜகங்களை நிகழ்த்தி வருகின்றனர். இவர்களின் கொட்டம், இன்னும் இரு மாதங்களில், தமிழக மக்களால் நிரந்தரமாக அடக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link