பெங்களூரு: இந்திய தடகளத்தில் தமிழகத்தின் ரீகன், பரனிகா, வித்யா உள்ளிட்டோர் தங்கம் கைப்பற்றினர்.
இந்திய தடகளம் சீசன் 1 போட்டி பெங்களூருவில் உள்ள கன்டீவ்ரா மைதானத்தில் நேற்று நடந்தது. ‘சீனியர்’ பிரிவில் தமிழக நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் ரீகன் (5.35 மீ.,) தங்கம் வென்றார். கமல் லோகநாதன் (5.10 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார். பெண்கள் பிரிவில் பரனிகா (4.10 மீ.,) தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் (57.10 வினாடி) தங்கம், அட்சயா (1:00.81) வெண்கலம் வென்றனர்.
பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் கவிதா (2:07.57 வினாடி) தங்கம் கைப்பற்றினார். 100 மீ., ஓட்டத்தில் கிரிதராணி (11.53), கிருத்திகா (11.89), ஆண்கள் பிரிவில் தமிழரசு (10.23), ராகுல் குமார் (10.49) தங்கம், வெள்ளி வசப்படுத்தினர்.
ஆண்கள் குண்டு எறிதலில் குமரன் (17.10), உயரம் தாண்டுதலில் ஆதர்ஷ் ராம் (2.23 மீ.,), 100 மீ., தடை ஓட்டத்தில் நந்தினி (13.55 வினாடி) வெள்ளி வென்றனர். எபெனேசர் (15.55, குண்டு எறிதல்), கெய்லே வெனிஸ்டர் (16.08 மீ., டிரிபிள் ஜம்ப்) வெண்கலம் கைப்பற்றினர்.
ஜூனியர் அபாரம்
20 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் 19 வயது இரட்டை சகோதரிகள், அக்ஸ்லின் (2:10.75) வெள்ளி, அன்ஸ்லின் (2:11.29) வெண்கலம் வென்றனர். உயரம் தாண்டுதலில் ஸ்ரீவத்சன் (2.00 மீ.,), வட்டு எறிதலில் அனுஸ்ரீ (41.22 மீ.,), ஈட்டி எறிதலில் அகிலன் ( 61.87), 100 மீ., ஓட்டத்தில் நெய்ல் சாம்ராஜ் (10.62) என அனைவரும் வெள்ளி வென்றனர். நீளம் தாண்டுதலின் ஆண்கள், பெண்கள் பிரிவில் ஜெயபிரனேஷ் (6.97), ஜெனிஸ்டா (5.48) வெண்கலம் கைப்பற்றினர்.
