பி ரச்சார வீடியோவில் ஹிந்தி எதிர்ப்பு, ‘நீட்’ எதிர்ப்பை தி.மு.க., கைவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக, ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பிரச்சார பாடலை, கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க., வெளியிட்டது.
இந்நிலையில், அந்த பாடலை புதுப்பொலிவுடன், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார். அதில் ஹிந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு பற்றி எந்த வரியும் இடம் பெறவில்லை. இது, தி.மு.க., தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., தரப்பில் கேட்டபோது, ‘பழைய வீடியோவில் ஹிந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு பற்றிய பாடல் வரிகள் இருந்தன. இன்றைய நிலையில் அவை எடுபடாது; மேலும் ஓட்டுகள் குறையவும் வாய்ப்புள்ளது. அதனால் அவற்றை நீக்கி, புதுப்பொலிவுடன் பாடல் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.
