ஏப்.8, 9-ம் தேதிகளில் கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் வருவதற்கு தடை

இந்​நிலை​யில், வரும் 9-ம் தேதி கேரள சட்​டப்​பேரவைக்கான வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. இதை முன்​னிட்​டு, கடந்த சில வாரங்​களாக மாநில எல்​லை​யில் இரு மாநில அதி​காரி​கள் சார்​பில் சோதனை​கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகு​தி​யாக, கேரளத்​தில் வாக்​குப்​ப​திவு நடை​பெறும் ஏப்.9 மற்​றும் அதற்கு முந்​தைய நாளான 8 ஆகிய 2 நாட்​கள் கேரளா​வுக்​குள் தோட்ட தொழிலா​ளர்​களை ஏற்​றிக்​கொண்டு வரும் ஜீப்​பு​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

அதே​நேரம், வழக்​க​மான பொது மற்​றும் தனி​யார் போக்​கு​வரத்​துக்கு எவ்​வித கட்​டுப்​பாடும் இல்​லை. இதுகுறித்து வனத்​துறை​யினர் கூறுகை​யில், ‘வரும் 9-ம்

தேதி வாக்​குப் பதிவுக்​காக கேரளத்​தில் சம்​பளத்​துடன் கூடிய பொது விடு​முறை அளிக்​கப்​பட்​டுள்​ளது. அன்று எஸ்​டேட் உள்​ளிட்ட பல இடங்​களில் எந்த வேலையும் நடை​பெறாது. மேலும் அரசு, பொதுத்​துறை மற்​றும் தனி​யார் நிறுவன தொழிலா​ளர்​களுக்​கும் விடு​முறை அளிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link