அதிவிரைவுப்படை அமைக்காத வனத்துறை

புதிதாக சூழல் சுற்றுலா வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும், வேடந்தாங்கல், பழவேற்காடு மேம்பாட்டு திட்டம், ராமேஸ்வரம் சுற்றுலா திட்டம் என, 2021 – 25ம் ஆண்டுகளில், வனத்துறையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவற்றில் ஒரு சில அறிவிப்புகள் அமலுக்கு வந்த நிலையில், பெரும்பாலான அறிவிப்புகள், அறிவிப்போடு நின்றுவிட்டன.

அவற்றின் விபரம்:

 வனப்பகுதிகளில் அன்னிய களைத் தாவரங்களை அகற்றி, வனச்சூழலை உருவாக்க தனி கொள்கை உருவாக்கப்படும்

 வனத்துறை ஆய்வு கட்டுரை ஆவணங்களை பாதுகாக்க, மாநில வன ஆவண களஞ்சியம் மற்றும் வன தரவு மையம் ஏற்படுத்தப்படும்

 வன நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த, ஆலோசனை நிறுவனங்கள் உதவியுடன், விரிவான வணிக ஆய்வு மேற்கொள்ளப்படும்

 மலைப்பகுதிகளில், உள்ளூர் மக்கள் பங்களிப்புடன் ஆறு இடங்களில், 14 கோடி ரூபாயில் சூழல் சுற்றுலா வழித்தடங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும்

 களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், உயிர் பன்மை ஆய்வகம் மற்றும் சுற்றுலா மையம், 3.6 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

 வனத்துறையின் மேலாண்மை செயல்பாடுகள் மற்றும் சேவையில் புதிய தொழில்நுட்பங்கள், 37 கோடி ரூபாயில் அமல்படுத்தப்படும்

 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சூழல் சேவைகளுக்காக, பள்ளிக்கரணை சதுப்புநில பாதுகாப்பு மையம், 20 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்

 ‘ராம்சார்’ தளமாக அறிவிக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள், 9.30 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்

 திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில், ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள், 6 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்

 திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில், சுற்றுலாத் திறனை மேம்படுத்த, உள்ளூர் மக்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்த, 3.70 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

 ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவில், உள்ளூர் சமூக அடிப்படையிலான, சூழலியல் சுற்றுலா மேம்பாட்டு திட்டம், 15 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்

 கோவையில், தமிழக வன உயர்பயிற்சியக மரபியல் பிரிவில், பூர்வீக இன விதை பெட்டகம், 10 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்

 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வனச்சரக எல்லையில், அணைக்கரையில் சதுப்புநில முதலைகள் பாதுகாப்பு மையம், 2.50 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்

 நீலகிரி மாவட்டம் கூடலுார்; கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், ஆர்க்கிட் செடி பாதுகாப்பு மையம், 3 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்

 விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், நீலகிரி மாவட்டங்களில், வன உயிரின புத்தாக்க வளர் மையங்கள் ஏற்படுத்தப்படும்

 திண்டுக்கல் மாவட்டத்தில், யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க, ஒரு சிறப்பு அதிவிரைவுப்படை, 1 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

Source link