இந்தியா 2வது இடம்: தெற்காசிய கால்பந்தில்

மாலி: தெற்காசிய கால்பந்து பைனலில் ஏமாற்றிய இந்திய அணி 3-4 என, ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.

மாலத்தீவில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 8வது சீசன் நடந்தது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, அரையிறுதியில் பூடானை தோற்கடித்தது.

பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 0-0 என சமநிலை வகித்தது. இதனையடுத்து போட்டியின் முடிவு ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஏமாற்றிய இந்தியா 3-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

வங்கதேச அணி 2வது முறையாக (2024, 2026) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதுவரை 4 முறை (2019, 2022, 2023, 2025) கோப்பை வென்ற இந்திய அணி 2வது முறையாக (2015, 2026) பைனலில் தோற்றது.

Source link