சார்லஸ்டன்: அமெரிக்காவில், டபிள்யு.டி.ஏ., சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் மோதினர். இதில் ஜெசிகா 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் 4-6, 6-3, 6-2 என, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை தோற்கடித்தார்.
மெல்போர்ன் கலக்கல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், ‘ஏ-லீக்’ கால்பந்து 49வது சீசன் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த லீக் போட்டியில் மெல்போர்ன் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெஸ்டர்ன் சிட்னி அணியை வீழ்த்தியது. சென்ட்ரல் கோஸ்ட், பெர்த் குளோரி அணிகள் மோதிய போட்டி 2-2 என ‘டிரா’ ஆனது. அடிலெய்டு யுனைடெட், ஆக்லாந்து அணிகள் மோதிய போட்டி 1-1 என, ‘டிரா’ ஆனது.
எக்ஸ்டிராஸ்
* ஜாம்ஷெட்பூரில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில் மோகன் பகான், ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது.
* ராஞ்சியில் நடக்கும் சப்-ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் டில்லி அணி 30-0 என்ற கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. உத்தரகாண்ட் அணி 4-0 என, தெலுங்கானாவை வென்றது. சத்தீஸ்கர் அணி 4-1 என, கர்நாடகாவை தோற்கடித்தது.
* ருமேனியாவில் நடக்கும் ஏ.டி.பி., புக்காரெஸ்ட் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 6-7, 4-6 என, பிரான்சின் சாடியோ, பேபியன் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
* தாய்லாந்தில் இன்று நடக்கவுள்ள பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து (20 வயது) தொடருக்கான லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி, ஜப்பானிடம் வீழ்ந்தது.
