ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணி பேசுவது அருவருப்பு: சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் அளித்த பேட்டி:

கடந்த லோக்சபா தேர்தலின்போது, எங்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால் திணறினோம். தற்போது விவசாயி சின்னம் இருப்பதால், தேர்தல் தேதி அறிவிப்பு வரை காத்திருக்காமல், பணிகளை துவக்கி உள்ளோம்.

தேர்தலில், பிற கட்சிகள் பெறும் வெற்றிக்கும் நாங்கள் பெறும் வெற்றிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நாங்கள் மாற்றத்துக்கான பயணத்தை துவக்கி உள்ளோம். இங்கு, பல ஆண்டுகளாக கட்சி அரசியல்; தேர்தல் அரசியல் என்று தான் நிலைமை உள்ளது.

மக்களுக்கான அரசியல் என்று ஒன்று இல்லவே இல்லை. இதை மாற்றவே நாங்கள் விரும்புகிறோம். அதற்காகத்தான், கூட்டணி இல்லாமல், தொடர்ந்து தனித்து களம் காண்கிறோம்.

தேர்தல் சமயத்தில், ஒரே நேரத்தில், இரண்டு கட்சிகளுடன், கூட்டணி பேசுவது அருவருக்கத்தக்கது. பேரம் பேசுவது என்பது, எந்த மாதிரியான அணுகுமுறை என்பதை, இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.

துவக்கத்தில் விஜய் என்னிடம் பேசும்போது, ‘கூட்டணிக்கு காங்கிரசை சேர்த்துக் கொள்ளலாமா?’ என கேட்டார். அப்போது, ‘காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால், என்ன மாதிரியான அரசியலை உங்களால் பேச முடியும்?’ என கேள்வி எழுப்பினேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link