GT Vs RR: `அதற்கான ஆலோசனையை அவர்தான் அளித்தார்!' – வெற்றி குறித்து கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் தொடரில் நேற்றைய (ஏப்ரல் 4) ஆட்டமான ராஜஸ்தான் vs குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இது வரை நடந்த போட்டிகளில் கடைசி வரை சென்று ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அமரவைத்த பெருமை இந்த போட்டிக்கே சேரும்.

ராஜஸ்தான் நிர்ணயித்த 210 என்ற இலக்கை துரத்திய குஜராத் அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

gt in match

இந்நிலையில் இப்போட்டிக்கு பின்னர் பேசிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், ” இந்த வெற்றி உண்மையிலேயே நம்ப முடியாத ஒன்று.

நாங்கள் ரிஸ்க் எடுத்து, முழு வேகத்தில் விளையாட முடிவு செய்தோம். அந்த திட்டத்தை எங்கள் அணி சரியாக செயல்படுத்தியது.

19 மற்றும் 20வது ஓவர்களில் யாரை பந்துவீச விடுவது என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அதற்கான முக்கியமான ஆலோசனையை த்ருவ் ஜுரேல் அளித்தார்.

19வது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் கொடுக்கலாம் என்று அவர் கூறினார். அந்த நேரத்தில் நிலைமை கடினமாக இருந்தாலும், வேகமாகவும் தைரியமாகவும் செல்வோம் என்ற அணுகுமுறையையே எடுத்தோம்.

வேலை செய்தால் சிறப்பு, இல்லையென்றாலும் அதை ஏற்றுக்கொண்டு அடுத்த முறை மீண்டும் முயற்சிப்போம் என்ற மனநிலையுடன் சென்றோம்.

RR கேப்டன் ரியான் பராக்
RR கேப்டன் ரியான் பராக்

ஜுரேல் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவர் பல முறை கீழ் வரிசையில் விளையாடியிருக்கிறார். ஆனால் இப்போது அவருக்கு மேல் வரிசையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அதைப் பயன்படுத்தி அவர் தன்னுடைய திறமையை நிரூபித்தார். இது அவருக்கான நல்ல தொடக்கம், தொடர்ந்து பெரிய ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றிகள் கொண்டுவருவார் என நம்புகிறேன்.

இன்று வெற்றியை கொண்டாடுவோம். ஆனால் நாளை முதல் அடுத்த போட்டியை நோக்கி கவனம் செலுத்துவோம்” என்று பேசியிருக்கிறார்.

Source link