விருதுநகர்: இபிஎஸ் சொல்லியிருக்கும் பொய்களை புத்தகமே போடலாம்; தான் சொன்ன பொய்களிலிருந்து தப்பிக்க அடுத்தடுத்து பொய் சொல்கிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இபிஎஸ் சொல்லியிருக்கும் பொய்களை புத்தகமே போடலாம்; தான் சொன்ன பொய்களிலிருந்து தப்பிக்க அடுத்தடுத்து பொய் சொல்கிறார்.
துரோகம்
காமராஜர் இறந்தபோது மெரினா கடற்கரையில் இடம் தர மறுத்தோம் என்கிறார் இபிஎஸ். சங்கி கூட்டணியில் சேர்ந்துவிட்டதால் வாட்ஸ் அப் வதந்தி போல் வாந்தி எடுக்கிறார். துரோகத்துக்கு உருவம் கொடுத்தால் அது இபிஎஸ் தான்; தன்னை நம்பியவர்களுக்கு அல்வா கொடுத்தவரை மக்கள் எப்படி நம்புவார்கள். வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம். பாஜவுடன் சேர்ந்து சிறுபான்மையினருக்கு துரோகம்.
ஏற்கனவே 10, அடுத்து 11
கட்சியில் உங்களை வளர்த்த சசிகலா, செங்கோட்டையனுக்கு துரோகம், ஓ.பன்னீர் செல்வத்துக்கு துரோகம். ஏற்கனவே 10. அடுத்து 11. விசுவாசத்திற்கு ஒரு உருவம் கட்டப்பா என்றால் துரோகத்திற்கு உருவம் இபிஎஸ். இல்லத்தரசி திட்ட வாக்குறுதியால் இபிஎஸ் வேதனையில் உள்ளார். பியூஸ் போன சாமி ஆகிவிட்டார். அதில் ஊழல் செய்துவிடுவோம் என்கிறார்.
தமிழகம் VS டில்லி
அவர் அவரது ஆட்சியில் நடப்பதையே எங்கள் ஆட்சியிலும் நடக்கும் என நினைக்கிறார். தேர்தல் வந்தால் இவர்களுக்கு காமராஜர் மீது மரியாதை வந்து விடும். டில்லியில் அவரை வீட்டோடு வைத்து எரிக்க முயன்றவர்கள் சங்கிகள். இப்படிப்பட்ட தமிழின விரோதிகளை தடுக்க வேண்டும். பாஜ ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் எந்த நிலையில் உள்ளது என்பது மக்களுக்கு தெரியும். தமிழகம் அணியா? டில்லி அணியா? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
விருதுநகர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது, தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
