எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா காட்டமான பதிலடி TN Election 2026 Why are you so bitter? Premalatha attack Edappadi Palaniswami

மதுரையில் இன்று இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பின் வருமாறு:-

எக்ஸ் முதல்வர் இன்னைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அவருடைய வார்த்தைகள் கண்ணியமாக, மற்றவர்கள் மதிக்கக்கூடிய அளவில் இருக்க வேண்டும். முதலமைச்சர் வேட்பாளராக இருக்கக் கூடியவர் மூன்றாம், நான்காம் கட்ட தலைவர்கள் போன்று பேசுவது கண்டிக்கத் தக்கது. மே 4-ந்தேதிக்குப் பின் அதற்கான பலனனை அவர் அனுபவிப்பார்.

அரை சதவீதம் ஓட்டு என்று சொல்கிறார். உங்களுக்கு என்ன வயிறு எரியுது. வயிறு எரிந்து கருகிய வாசனை தமிழ்நாடு முழுவதும் வருது. அவ்வளவு வயிற்றெரிச்சல். முன்னதாக நாங்கள் என்டிஏ மற்றும் அதிமுக கூட்டணியில்தானே இருந்தோம். இருக்கும்போது அருமை தெரியவில்லை. தற்போது திமுக கூட்டணிக்கு வந்ததும் வயிற்றெரிச்சல் பட்டு பொருமிக்கு கொண்டிருக்கிறாரு. முதலமைச்சர் வேட்பாளருக்கு இது அழகல்ல.

எங்களை ICU கட்சி என்கிறார். மே 4-ந்தேதி தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர் ICU-க்கு போகாமல் இருக்கனும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

Source link