டெல் அவிவ் : இஸ்ரேல் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினர் சுமார் ஒரு இலட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர். இஸ்ரேலில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர்.
தற்போது இருந்து வரும் போர் சூழலில் இந்திய துாதர் ஜே.பி. சிங் இந்திய சமூகத்தினருடன் காணொலி வழியாக உரை நிகழ்த்தினார்.
அப்போது இந்திய சமூகத்துக்கு தேவையான எல்லாவிதமான ஒத்துழைப்பும் வழங்கப்படும் என உறுதியளித்தார். தேவையற்ற வகையில் வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்திய தூதரக அதிகாரி சர்வ்ஜீத் சூடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
