பெரம்பலூர்: நீ எனக்கு ஓட்டு போட்டால் போடு இல்லைனா போ, உடம்புல தெம்பு இருக்கிற வர இதே இடத்துல நின்னு கத்தி கத்தி செத்துக்கூட போவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
பெரம்பலூரில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது:எனக்கு முன்னாடி இரண்டு இருந்தது. பதவியா? மக்களுக்கான உதவியா? பணமா? பிறந்த இனமா? பதவி? உதவியா என்றால் உதவி. மறுபடியும் வெயிலுக்கு வந்துட்டேன். முச்சந்திக்கு வந்து கத்துகிறேன். பணமா? இனமா? பெருமை மிக்க தமிழன் என்கிற இனம். அதனால் உன் மகன் கத்துகிறேன். இந்த சத்தம் உன் காதில் விழுந்து, உன் மூளைக்குள் போகி, உன்னை சிந்திக்க வைத்துவிட்டால் நான் பிறந்த பலனை அடைந்து விட்டேன்.
கத்தி கத்தி
நீ எனக்கு ஓட்டு போட்டால் போடு இல்லைனா போ, உடம்புல தெம்பு இருக்கிற வர இதே இடத்துல நின்னு கத்தி கத்தி செத்துக்கூட போவேன். ஆனால் எவனிடம் கையேந்துகிற பரம்பரையில் பிறந்தவன் அல்ல; சரண் அடைந்து வாழ்வதற்கு, சண்டையிட்டு வாழ்வது மேல், உயிரை இழக்கலாம், உரிமையை இழக்க கூடாது. உயிரிலும் மேலானது நமது உரிமை. மண்டியிட்டு வாழ்வதற்கு மானத்தோடு மாண்டு போகலாம். மரணித்து போகலாம் இது தான் உங்களது பிள்ளைகளின் நிலைப்பாடு. இந்த நாட்டை மாறி, மாறி நாசம் செய்தது பாஜ, காங்கிரஸ், திமுக, அதிமுக.
எதிரிகள்
நான்கு பே ரும் நமக்கு எதிரிகள். இவர்களை ஒழிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு நாடாக இருக்காது, சுடுகாடாக மாறிவிடும். நான்கு பக்கமும் எதிரிகள் இருக்கிறார்கள்; நடுவில் நாம் தமிழர் கட்சி இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு ஓட்டளிக்க வேண்டும். கருணாநிதி ஆட்சியில் 25 ஆண்டுகள் வாழ்த்துவிட்டாய், ஜெயலலிதா ஆட்சியில் 20 ஆண்டுகள். ஸ்டாலின் ஆட்சியில் 5 ஆண்டுகள். இபிஎஸ் ஆட்சியில் நான்கரை ஆண்டுகள், ஒருமுறை உனது மகன் ஆட்சியில் வாழ்ந்து பாரு, உலகத்தின் தலைசிறந்த நாடாக மாற்றி படைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.
