அபுதாபி : அபுதாபியில் பொரூக் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலின் போது அதனை பாதுகாப்பு படையினர் தடுத்தனர். அப்போது ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
யாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.
பொதுமக்கள் அரசின் அதிகாரபூர்வமான தகவலை மட்டும் பார்த்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
