திருவண்ணாமலை: நாங்கள் கூட்டணியில் இருந்து வந்ததை அதிமுகவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இபிஎஸ் செய்தது தவறு என

திருவண்ணாமலை: நாங்கள் கூட்டணியில் இருந்து வந்ததை அதிமுகவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இபிஎஸ் செய்தது தவறு என அதிமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரைபெர்சன்ட் ஓட்டு என இபிஎஸ் சொல்கிறார். உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது. அங்கு வயிறு கருகும் வாசனை தமிழகம் முழுவதும் வருகிறது. அவ்வளவு கருகிறார்கள். அவ்வளவு வயிற்றெரிச்சல்.2011 – 2026 வரையில் அவர்கள் கூட்டணியில் தான் இருந்தோம். முதல்வர் வேட்பாளருக்கு அழகல்ல. இது நிச்சயம் கண்டிக்கக்கூடிய விஷயம்.அவர் கையெழுத்து போட்டதை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கோவிலில் காட்டியது கிடையாது.ராஜ்யசபா சீட்டுக்கு அவர் கையெழுத்து போட்டதுகொடுத்தது உண்மை.நான் எங்கு போட்டேன். நான் எங்கு சொன்னேன் என்று சொல்கிறார்.

அரசியலில் மரியாதை காரணமாக கண்ணியத்தை கடைபிடித்து அதை இதுவரை காட்டவில்லை. இன்று அதை காட்ட வேண்டிய நிலைக்கு என்னை அவர் தான் கொண்டு செல்கிறார்.

(லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை காட்டுகிறார்)5 லோக்சபா எம்பியும் தொகுதிகளும், ஒரு ராஜ்ய்சபா சீட்டும் தரப்படும் என்பதை அவர் ஒரு புறமும், நான் ஒரு புறமும் கையெழுத்து போட்டுஉள்ளோம்.2024 ல் கையெழுத்து போட்டுள்ளார். 2025 ல் கொடுத்து இருக்க வேண்டும். வருடம் போடாமல்ஒப்பந்தம் போடுகிறீர்களே, வருடம் போட்டு கொடுங்கள் என்று கேட்ட போது, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் வருடம் போடுவது இல்லை. எனது வார்த்தை தான் முக்கியம். இது சாதாரண பேப்பர். வார்த்தை தான் முக்கியம். அதை நம்புங்கள் என்று இபிஎஸ் சொன்னார்.சொன்ன வார்த்தையை நம்புனோம். ஆனால், அவர் நம்பிக்கைக்கு புறம்பாக பேசிவிட்டார்.நான் எங்கு சொன்னேன். யார் யாரோ சொல்வதற்கு பதில் சொல்ல முடியாது என்றார்.இன்று அரை பெர்சன்ட் ஓட்டு என்கிறார். அது இது என்கிறார். அது தப்பு. எங்களுக்கும் கீழ்த்தரமாக பேசத் தெரியும்

ஆனால், அரசியலில் மரியாதையோடு நடத்த வேண்டும் என்கிறார். நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததை அதிமுகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இபிஎஸ் செய்தது என்பதை அஐனத்து அதிமுகவினர் சுட்டிக்காட்டுகிறார்.அவர் பேசுவதற்கு மே 4 ல் வரும்ரசில்ட் தான் பதில்.ஐசியூ என்கிறார். மே 4 முடிவுக்கு பிறகு, அவர் ஐசியூவுக்கு போகாமல் இருக்க வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Source link