“இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா”

பிஸ்வநாத்: “இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தான். அசாமின் நிலத்தை அம்பானி, அதானி மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோரிடம் அவர் ஒப்படைத்துவிட்டார்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அசாம் மாநிலம் பிஸ்வநாத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “உங்கள் முதல்வர் 24 மணி நேரமும் அர்த்தமற்ற பேச்சுகளைப் பேசிக்கொண்டிருக்கிறார். உயிரிழந்த பாடகர் ஜுபீன் கார்க் தனது வாழ்நாள் முழுவதையும் அசாமிற்காக அர்ப்பணித்துள்ளார். அவர் யாரிடமும் ஒருபோதும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதில்லை. உங்கள் முக்கியத் தலைவர்கள் அசாமைப் பிளவுபடுத்த ஒருபோதும் முயன்றதில்லை; அவர்கள் வெறுப்பைப் பரப்ப ஒருபோதும் முயன்றதில்லை.

Source link