சென்னை: ” பெரம்பூர் தொகுதி வாக்காளர்கள் தவறாக தேர்வு செய்தால், பனையூரில் கேட் வாசலில் நிற்க வேண்டியிருக்கும்,” என பெரம்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசினார்.
சென்னையில் பெரம்பூரில் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: இந்த தொகுதி மக்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் பார்க்க முடியாத. பேச முடியாத அணுக முடியாதா எம்எல்ஏ வேண்டுமா? நீங்கள் பனையூர் கேட் வாசலில் நிற்க வேண்டும். தவறாக முடிவு செய்தால் பனையூர் கேட் வாசலில் நிற்க வேண்டும். இத்தொகுதி விஐபி தொகுதி கிடையாது. சாமானிய வாழும் மக்கள் வஞ்சிக்கப்பட்ட மக்கள். ஒடுக்கப்பட்ட மக்கள். அனைவரும் தொழிலாளர்கள். அனைவரும் சிரமப்பட்டு முன்னுக்கு வர வேண்டும் என உழைத்து கொண்டு உள்ளனர்.
திருமாவளவனுடன் கூட்டணி. ஆனால் 5 வருடமாக லோள்பட்டு கொண்டுள்ளனர். வாய் பேச முடியவில்லை. அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கின்றனர். ஊழல் திமுகவை ஒழிக்க வேண்டும். அப்புறப்படுத்த வேண்டும் என்றஒரே காரணத்துக்காக விஜயகாந்த் கட்சி துவங்கினார். ஆனால், பிரேமலதா அங்கேயே சேர்ந்துவிட்டார். விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது. சும்மா இருக்காது. எவ்வளவு பெரிய துரோகம்.
அவர்கள் போன உடனே 10 தொகுதிகள். ஆனால், திருமாவளவன் அவ்வளவு உழைச்சு அவருக்காக ஓட்டு வாங்கி கூட இருந்த திருமாவளவனுக்கு 8 தொகுதி.
இது தான் திமுக. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். ஓட்டு வங்கியாக தான்பார்க்கிறார்கள். ஓட்டு மட்டும் தான் போட வேண்டும். ஆனால், அவர்கள் முன்னேற கூடாது. படிக்கக்கூடாது. மது, போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும். படிப்பறிவு இருக்கக்கூடாது அவ்வளவு தான் திமுகவின் நோக்கம். ஆனால், சமூக நீதி உயிர் மூச்சு என திமுக சொல்கிறது. இவ்வாறு அன்புமணி பேசினார்.
